Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசச் சார்பற்றவர்கள்: சர்தாரி

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசச் சார்பற்றவர்கள்: சர்தாரி
, புதன், 3 டிசம்பர் 2008 (19:19 IST)
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சா‌ற்றை மறுத்துள்ள அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தேசச் சார்பற்றவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு சர்தாரி அளித்துள்ள பேட்டியில், தெற்காசியாவில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் தேசச் சார்பற்றவர்கள் என்றும், அவர்கள் ஒட்டுமொத்த உலகையும் பிணையமாகப் பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

எனவே, மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக வெள்ளை மாளிகையும், அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகளால் இந்தியா அல்லது மும்பைக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு‌ம் அச்சுறுத்தல் உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இது எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியா படையெடுக்குமா?: மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் என்று கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள சர்தாரி, ஜனநாயக நாடுகள் போரை விரும்பாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் நடைபெற்ற 3 போர்களின் போதும் பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றதையும் சுட்டிக்காட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil