இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்காவில் பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு கூறியுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள கொக்காவில் பகுதியை மிக நீண்ட காலப் போருக்குப் பிறகு திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு கூறியுள்ளது.
முதலில் கொக்காவிலுக்கு வடக்கே ஏ-9 சாலைக்குச் சென்ற படையினர் அங்கிருந்து தெற்குப்புறமாக முன்னேறி, மாங்குளம் வரை சென்றுள்ளனர்.
இதற்கிடையில் கிளிநொச்சிக்கு தென்மேற்கே அக்கராயன்குளம், அடம்பன் பகுதிகளில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறித் தாங்கள் முன்னேறி வருவதாகப் படையினர் கூறியுள்ளனர்.