மெக்சிகோவின் ஒசாகா மாகாணத்தில் நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
ஒரு திருப்பத்தில் பேருந்தை திருப்பிய ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து கவிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.