பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் படகு மூழ்கிய விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லுசோன் தீவுப் பகுதியில் உள்ள மாஸ்பேட் என்ற இடத்தில் இருந்து சோர்சோகன் நோக்கி 119 பயணிகளும் சென்ற சிறிய படகு, பலத்த காற்று வீசியதன் காரணமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக அப்பகுதி காவல்துறை மூத்த அதிகாரி ருபென் சின்டாக் கூறியுள்ளார்.
இதில் நீரில் தத்தளித்த 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டாலும், 39 பேர் உயிரிழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
படகில் பயணம் செய்த மேலும் 14 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.