அமெரிக்காவில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தல் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகையின் மிக உயர்ந்த பதவியை முதல்முறையாக ஒரு கறுப்பர் ஏற்பார் என்று அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னும், ஒஹியோ மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் இறுதிக்கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பெரும்பாலான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஒபாமா புதிய அதிபராக தேர்வாவது உறுதி என்று தெரிவித்துள்ளன.
என்றாலும் மெக்கெய்னும் தாம் அதிபராவேன் என்று கூறி வருகிறார்.
ஒபாமாவிற்கு 51 முதல் 53 விழுக்காடு அளவு வாக்குகள் கிடைத்து அதிபர் பதவியை ஏற்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருப்பதால், அவர் அதிபராவது அநேகமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.