ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்பட்டு வரும் அமைச்சக அலுவலகத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காபூல் காவல்துறை துணைத் தலைவர் அலிஷா அஹ்மத்சாய் கூறுகையில், தகவல் மற்றும் கலாச்சார அமைச்சக வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அறையில் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.