மாலத்தீவு: மாலத்தீவில் நடைபெற்ற முதல் ஜனநாயக அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மொகமத் நஷீத் வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு செவ்வாயன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் நஷீத் 54 விழுக்காடு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
தற்போதைய அதிபர் மௌமூன் அப்துல் கயூம் 46 விழுக்காடு வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால் இவரது 30 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.
மாலத் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2,09,000. இதில் 87 விழுக்காடு மக்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.