Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிண்ட்ராஃப் அமைப்புக்கு மலேசிய அரசு தடை!

ஹிண்ட்ராஃப் அமைப்புக்கு மலேசிய அரசு தடை!
, வியாழன், 16 அக்டோபர் 2008 (16:09 IST)
இந்து உரிமை நடவடிக்கை சங்கத்தின் (ஹிண்ட்ராஃப்) நடவடிக்கைகள் மலேசியாவின் பாதுகாப்புக்கும், நாட்டின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளதால் அந்த அமைப்புக்கு தடைவிதிப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைக்சர் சையத் ஹமீத் அல்பர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக ஹிண்ட்ராஃப் அமைப்பு முறையான அனுமதி பெறாமல் போராட்டங்கள் நடத்துவது, தங்களுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில் மலேசியாவின் நன்மதிப்பை பாதித்துள்ளது.

மலேசியாவில் இனப்பாகுபாட்டை களைய அமைதியான முறையில் போராடுவோம் என்று கடந்த ஆண்டு ஹிண்ட்ராஃப் கூறியதாலேயே அந்த அமைப்புக்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்குமபங்கம் விளைவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதால் ஹிண்ட்ராஃப் அமைப்பை மலேசிய அரசு தடை செய்துள்ளது.

ஹிண்ட்ராஃப் அமைப்பின் நடவடிக்கைகளை தற்போது தடுக்காமல் விட்டால் அது நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் இறையாண்மையை பாதிப்பதுடன், பல்வேறு இனமக்களிடையே பகைமை உணர்வை ஏற்படுத்தும் என்பதாலேயே மலேசிய அரசு அந்த அமைப்பிற்கு தடைவித்துள்ளதாக அவர் விளக்கினார்.

ஹிண்ட்ராஃப் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர் என்.சுரேந்திரன் பேசுகையில், அரசின் தடை காரணமாக ஹிண்ட்ராஃப் அமைப்புடன் இனி இணைபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறினார்.

மலேசியாவில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர துறைகளில் இந்தியர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பர் மாதம் ஹிண்ட்ராஃப் அமைப்பினர் நடத்திய பேரணியை கலைக்க அந்நாட்டு காவல்துறையினர் தடியடி நடத்தி கடுமையாக நடந்து கொண்டனர். இதில் பல இந்தியர்கள் படுகாயமடைந்தனர்.

இதன் காரணமாக உலக நாடுகளின் கவனம் மலேசிய அரசின் மீது திரும்பியது. இதையடுத்து உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், ஹிண்ட்ராஃப் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக தற்போதைய தேசிய பாரிஸன் கூட்டணி தலைமையிலான மலேசிய அரசு கடந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது நினைவில் கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil