தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்று பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் காவல்துறை உயரதிகாரி அக்கபார்க் கூறுகையில், இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 3 அல்லது 4 உடல்கள் பேருந்துக்குள் சிக்கியுள்ளதாக கருதுவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம் தெரிவித்தார்.
அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கோன் கேயன் மாகாணத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப பல்கலை மாணவர்கள் சென்ற பேருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 2 மணியளவில்) சந்தபுரி மாகாணப் பகுதியில் கவிழ்ந்ததாகவும், இதில் 16 மாணவர்கள், 3 மாணவிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.