ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் அயலுறவு அமைச்சர் டாரோ அஸோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதனன்று நடைபெறும் வாக்கெடுப்பின் போது ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அஸோ பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னால் பிரதமர் பதவியில் இருந்த இருவரும் ஒரு ஆண்டு பதவியில் இருந்த பிறகு பதவி விலகியதால் ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு பொது மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது.
பிரதமருக்கான இந்த போட்டியில் மற்ற 4 வேட்பாளர்களையும் அஸோ தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.