பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், முஷாஃபராபாத், அப்போடாபாத் சிட்ரல் மற்றும் மாலகாந் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.