Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒபாமாவைக் கொல்ல முயன்ற 4 பேர் கைது!

Advertiesment
ஒபாமாவைக் கொல்ல முயன்ற 4 பேர் கைது!
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:18 IST)
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் நகரில் அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமாவை கொல்ல முயன்ற 4 பேரை அந்நகர காவல்துறையினர் கைது செய்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக டென்வர் நகரத்தில் செயல்படும் CBS34 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தியில், கைது செய்யப்பட்டவர்கள் வரும் வியாழனன்று ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற உள்ள மனுத்தாக்கல் ஏற்பு நிகழ்ச்சியின் போது மிக உயரமான இடத்தில் இருந்து ஒபாமாவை சுட்டுத்தள்ள திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டவரிடம் 2 அதிசக்தி வாய்ந்த ரைஃபிள் துப்பாக்கி இருந்ததாகவும் அந்த தொலைக்காட்சி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘ராக்கி மவுண்டன’ நாளிதழுக்கு அட்டர்னி டிராய் அளித்துள்ள பேட்டியில், ஒபாமா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், அவரது பாதுகாப்பு விஷயம் குறித்து இன்றிரவு அரோரா காவல்துறையுடன் விவாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil