தெற்கு திபெத்தில் நேற்றிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.8 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 9.22 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று மலை 6.52மணி) ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே 31.0 டிகிரி கோணத்திலும், தீர்க்கரேகையிலிருந்து கிழக்கே 83.6 டிகிரி கோணத்திலும் மையம் கொண்டிருந்ததாகவும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது கடல்மட்டத்திலிருந்து 5,500 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் பற்றி இதுவரை தகவல் எதுவும் இல்லை.