ஈராக்கில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள அபுகிரேப் என்ற மாட்டத்தில் நேற்றிரவு நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மர்ம நபர் ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் 25 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல் காய்டா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சன்னி பிரிவினர் மற்றும் காவலர்கள் ஆவர். இவர்கள் அனைவரம் அமெரிக்கப் படையினருக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் என்பதால், அல் காய்டா இயக்கம் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.