கிர்கிஸ்தான் நாட்டில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 70 பேர் பலியானார்கள்.
கிர்கிஸ்தான் தலைநகர் பைஷ்கெக்கில் இருந்து வடகிழக்கு ஈரானின் உள்ள மாஷாத் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம் மானாஸ் பன்னாட்டு விமானநிலையம் அருகே இன்று காலை விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்தது.
போயிங்-737 என்ற இந்த தனியார் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமான ஓட்டிகள் கண்டறிந்தனர். இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்குவதற்காக மீண்டும் மானாஸ் விமான நிலையத்துக்கு திரும்பி வந்து கொண்டிந்தது.
ஆனால், மானாஸ் விமானநிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே அந்த பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 70 பேர் உடல் கருகி பலியானார்கள். 20 பேர் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.