அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக ஜோசப் பிடேன் என்பவரைத் இன்று தேர்ந்தெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைய்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், துணை அதிபர் வேட்பாளராக டெல்லோவார் செனட்டர் ஜோசப் பிடேனை பராக் ஒபாமா தேர்ந்தெடுத்துள்ளார்.
துணை அதிபர் வேட்பாளர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்ட இன்டியான செனட்டர் இவான் பயா, விர்ஜியானா கவர்னர் டிம் கெய்ன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, 65 வயதாகும் பிடேன்-ஐ ஒபாமா தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செனட் அயலுறவு நட்பு குழுத் தலைவரான பிடேன் கடந்த 1972 ஆம் ஆண்டு தனது 29-வது வயதில் முதல் முதலாக அந்நாட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.