Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு ஒப்பந்தம்: இந்தியாவுக்கு நெருக்கடி!

அணு ஒப்பந்தம்: இந்தியாவுக்கு நெருக்கடி!
, ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2008 (15:31 IST)
அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்களிக்கக் கூடாது என நிபுணர்களும், தன்னார்வ அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக அணு எரிபொருள் வழங்கும் (என்.எஸ்.ஜி.) 45 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு, அணு ஆயுத பரவல் தடை நிபுணர்கள் 150 பேர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் 178 நாடுகள் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. மேலும் தனது அணு சக்தி திட்டங்களையும் பெருக்கி வருகிறது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உரிமைகளும், வசதிகளும் இந்தியாவுக்கு கிடைப்பது, ஆபத்தான வேறுபாடுகளை உருவாக்கி விடும். இது அணு ஆயுத ஒழிப்பு முயற்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கு விலக்கு அளித்துத்தான் ஆக வேண்டும் என்று என்.எஸ்.ஜி. தீர்மானித்தால், அதற்கேற்ப அர்த்தமுள்ள விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இந்தியாவுக்கு விதிக்க வேண்டும். அணுஆயுத சோதனை நடத்தினால் அணு வர்த்தக உறவை முறித்துக் கொள்ளப்படும் என்ற என்ற விதி சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், தற்போது சர்வதேச அணுசக்தி கழகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான அந்த நாடுகளின் கூட்டம் அடுத்த வாரம் வியன்னாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நிபுணர்கள் எழுதியுள்ள இக்கடிதம், இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil