ஜார்ஜியாவின் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒசிடியா பகுதியைச் சேர்ந்தவர்கள் தனி நாடு கேட்டுப் போராடி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க ஜார்ஜியா ராணுவம் தாக்குதல் நடத்தியதால், ஆயிரக்கணக்கானவர்கள் தெற்கு ஒசிடியாவில் இருந்து தப்பி ரஷ்யாவில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்த ரஷ்யப் படையினரின் மீது ஜார்ஜியா படைகள் தாக்குதல் நடத்தின.
இதையடுத்து ரஷ்யப் படைகள் ஜார்ஜியாவின் ஒசிடியா, கோரி உள்ளிட்ட பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. ரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா படையினரின் மீது சராமாரியாகக் குண்டுகளை வீசி வருகின்றன. கரீபியன் கடல் பகுதியில் ஜார்ஜியா நாட்டுக் கடற்படைப் படகு ஒன்றை ரஷ்ய விமானங்கள் குண்டு வீச் மூழ்கடித்தன. இந்தத் தாக்குதலில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு ஒடிசியாவில் இருந்து தனது படைகளை ஜார்ஜியா திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. போர் நிறுத்தம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தள்ள ஜார்ஜியா, அதுபற்றிப் பேச்சு நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளது.