வியட்நாமில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 97 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
வியட்நாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 48க்கும் மேற்பட்டோரை காணவில்லை. லாகாய், யென்பே, புதோ, குவாங் நின் உள்ளிட்ட 10 மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
லாகாய் மாகணத்தில்தான் சேதம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இங்கு மட்டும் 36 பேர் பலியாகியுள்ளனர். யென்பே மாகாணத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மக்களும், மீட்பு குழுவினரும் இணைந்து வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.