பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து பர்வேஸ் முஷாரஃப் விலக வேண்டும் என்று அவரது ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) வலியுறுத்தியுள்ளது.
முஷாரஃப்-க்கு எதிராக பாராளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட உள்ள பதவி பறிப்புத் தீர்மானத்துக்கு (இம்பீச்மெண்ட்) ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
முஷாரஃப் பதவி விலகினால் அவருக்கு "பாதுகாப்பான வெளியேற்றம்" கொடுக்கும்படி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) கட்சியைச் சேர்ந்த குறைந்த பட்சம் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரியிடம் முறையிட்டுள்ளனர்.
முஷாரஃப் அதிபர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் முஷாரஃப்-க்கு எதிரான பதவி பறிப்புத் தீர்மானத்தை சர்தாரி ஒத்திவைப்பார் என்றும் தான் நம்புவதாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) கட்சி உறுப்பினர் நஸ்ரூல்லா பஜ்ரானி தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.