ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மித நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.5 ஆக பதிவாகி உள்ளது.
மேற்கு டோக்கியோவில் உள்ள 'டாமா' பகுதியில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை (சுனாமி) ஆபத்து எதுவும் இல்லை என்றும் அவ்வாராய்ச்சி மையம் கூறியுள்ளது.
மத்திய டோக்கியோ முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பல்வேறு ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டடங்கள் சிறிய அளவில் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிர்ச்சேதம் பற்றி உடனடியாக தகவல் ஏதும் இல்லை.