இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் முழுவதும் நடந்துள்ள மோதல்களில் 106 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 662 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்க நாடாளுமன்றத்தில் இன்று நெருக்கடி நிலையை நீட்டிப்புச் செய்யும் தீர்மானத்தின் மீது பேசிய சிறிலங்கப் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயக, ஜூலை மாதத்தில் நடந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 106 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 662 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே காலத்தில், பொது மக்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 31 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்று தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.