பாகிஸ்தான் முழுவதும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள கைபர் பழங்குடியின பகுதியில்தான் பெருமளவில் சேதம் ஏற்பட்டு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். இரண்டு குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பெஷாவர் நகரத்தில் மேலும் மூன்று பேர் பலியானார்கள்.
கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இப்பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
அவசர கால நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டு வெள்ள மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெற்கு சிந்து மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.