கனடாவின் கடற்கரை நகரமான வடக்கு வான்கூவர் தீவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியானார்கள். இவ்விபத்தில் இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் 'போர்ட் ஹார்டி' என்னுமிடத்தில் இருந்து 'சாமிஸ் பே' என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்தது. ஆனால் விமானம் புறப்பட்ட 10 -வது நிமிடத்திலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.
படுகாயமடைந்த ஒருவர் தனது நண்பர் ஒருவருக்கு இது பற்றி தகவல் அளித்தார். இதையடுத்து அந்த நண்பர் மீட்பு படையினருக்கு இத்தகவலை தெரியப்படுத்தினார். பல மணி நேரம் தேடுதலுக்குப் பின் மீட்பு குழுவினர் விமானம் நொறுங்கி விழுந்த இடத்தைக் கண்டு பிடித்தனர்.
உயிர் தப்பிய இருவரில் ஒருவர் படுகாயமடைந்தார். ஒருவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.