Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சார்க் நாடுகளில் உணவு பாதுகாப்பு!

சார்க் நாடுகளில் உணவு பாதுகாப்பு!
, திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (13:01 IST)
சார்க் அமைப்பில் உள்ள நாடுகளில் உணவு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கொழும்பில் கூடிய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.

சிறிலங்கா தலைநகர் கொழும்புவில் சார்க் என்று அழைக்கப்படும் தெற்காசிய மண்டல நாடுகளின் 15வது மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கொழும்பு பிரகடனத்தில் கூறியிருப்பதாவது:

தெற்காசிய பிராந்தியம் உட்பட உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் சார்க் நாடுகளின் உணவு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு சார்க் நாடுகள் ஒன்றுபட்டு திட்டங்களையும், வழிமுறைகளையும் ஆராய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தற்போதுள்ள உணவு நெருக்கடியை தீர்ப்பதுடன், மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் குறுகிய காலத்திற்கும், நீண்ட காலத்திற்குமான திட்டங்களை தீட்டி, நடைமுறை படுத்தும்படி சார்க் நாடுகளின் விவசாய துறை அமைச்சர்களுக்கு தலைவர்கள் உத்தரவிட்டனர்.

சார்க் நாடுகள் இணைந்து அமல்படுத்தும் திட்டங்கள், உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாய துறையில் முதலீடு அதிகரிப்பதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் விவசாய துறையுடன் தொடர்புடைய தொழில்கள், மண் வளம் பாதுகாப்பு, தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ளல், உணவு தானிய கொள்முதல் மற்றும் விநியோகத்தில் சிறந்த முறை, விவசாய துறையை பாதிக்கும் பூச்சி தாக்குதல், நோய்களை கட்டுப்படுத்துதல், பருவநிலை மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைக்கும் படி இருக்க வேண்டும்.

சார்க் நாடுகளிடையே உணவு தானிய சேமிப்பு வங்கி உடனடியாக செயல்படுத்த வேண்டும். சார்க் நாடுகளின் விவசாய எதிர்கால திட்டம்-2020 திட்ட ஆவணத்தை தயாரிப்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தெற்காசிய மண்டலத்தில் உணவு பாதுகாப்புக்கும், மக்களுக்கு தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உலக சமுதாயத்துடன் அதிக ஒத்துழைப்பு குறித்தும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சார்க் மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil