ஜப்பானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலில் சுமார் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கத்தின் மையம் இருந்ததாகவும், ஒகினோ தீவில் வசிப்பவர்கள் இந்த நில நடுக்கத்தை நன்கு உணர்ந்ததாகவும் ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் நில நடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றும் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
நில நடுக்கம் உணரப்பட்ட ஒகினோ பகுதி தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 1,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.