ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்வது குறித்த கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்று ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பதிலளிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. நூரி அல் மாலிக் என்ன கூறினார் என்ற விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அதுபற்றிக் கருத்துக் கூற முடியாது என்றும், அமெரிக்கப் படைகளின் ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் வெளிப்படையாகக் கூற முடியாது என்றும் அமெரிக்க அயலுறவுப் பேச்சாளர் ஷென் மெக்கார்மெக் கூறியுள்ளார்.
அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் தொடர்பாக நூரி அல் மாலிக் முதன்முறையாகக் கருத்துக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.