மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படைகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 25 படையினர் கொல்லப்பட்டதுடன், 45க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
மன்னாரின் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத்திடலில் இருந்து தேனுடையானில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தினர். இம்முன்நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இருதரப்பிற்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 25க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 45க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், மன்னார் பெரியமடு பகுதியிலும் சிறிலங்கப் படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரத் தாக்குதல் நடத்தி வருவதாக அச்செய்தி மேலும் கூறுகிறது.