தங்கள் நாட்டுக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தாகக் கூறி கைது செய்திருந்த இந்திய மீனவர்கள் 19 பேரை சிறிலங்க அரசு விடுதலை செய்துள்ளது.
கச்சத்தீவு அருகில் சிறிலங்கக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரை சிறிலங்கக் கடற்படையினர் அண்மையில் கைது செய்தனர்.
இதையடுத்து இந்திய அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் மீனவர்கள் 19 பேரை சிறிலங்க அரசு விடுதலை செய்துள்ளது. மீதமுள்ள 4 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.