வடமேற்கு ஈராக்கில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
சின்ஜார் நகரில் உள்ள காவலர்கள் தேர்வு மையத்தில் நுழைந்த மர்ம நபர், தன்னுடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்கியதாகக் காவல்துறை உயரதிகாரி தக்ஷில் காசிம் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் இரண்டு காவலர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
சிரியா எல்லையில் உள்ள சின்ஜார் நகரில் யாஷிதி சிறுபான்மைப் பிரிவினர் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களுக்குள்ள காவலர்கள் மீதான வெறுப்பின் காரணமாக இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனறு கருதப்படுகிறது.