வரலாற்றுப் புகழ்மிக்க பெர்லின் நகரப் போர்க் கல்லறையில் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார்.
மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார்.
ஜெர்மனியில் இறங்கியவுடன், தலைநகர் பெர்லினில் உள்ள போர்க் கல்லறைக்கு சென்ற அமைச்சர் ஏ.கே.அந்தோணி, அங்குள்ள இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று உயிர்நீத்த 50 இந்தியப் படை வீரர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அங்கு நடந்த சிறிய நிகழ்ச்சியில் மதகுருமார்கள் பிரார்த்தனை நடத்தினர். பின்னர் அமைச்சரும் அதிகாரிகளும் சிவப்பு ரோஜாக்களை எடுத்து கல்லறைகளின் மீது வைத்து மரியாதை செய்தனர்.