நேபாளத்தில் இன்று 4.3 ரிக்டர் அளவிற்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இமயமலை நாடான நேபாளத்தின் மேற்குப் பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பக்லுங் மாவட்டத்தில் உள்ள சியான்தண்டா என்ற இடத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆகப் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக் கண்டம் யுரேசியா கண்டத்துடன் மோதியபோது உருவான திபெத்திய நிலத்தட்டில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது சகஜம். இதனால் பயங்கர பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
திபெத்திய நிலத்தட்டுடன் இணைந்துள்ள சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் 41,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.