சிறிலங்காச் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகள் 43 பேர் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசிடமும். தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"இலங்கை இனப் பிரச்சனை தற்போது தீவிரமடைந்து வருவதால் சிறைகளில் உள்ள எங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இனப் பிரச்சனை தீவிரமான காலங்களில் சிறைகளில் இருந்த கைதிகளுக்கு ஏற்பட்ட கதி எங்களுக்கும் ஏற்படலாம் என்று நாங்கள் அச்சமடைகிறோம். எனவே எங்களின் சொந்த நாட்டில் உள்ள சிறைகளில் எங்களின் தண்டனைக் காலத்தை அனுபவிக்க வழி ஏற்படுத்த வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
தங்களின் கோரிக்கைகளை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கவனிப்பதில்லை என்றும், கடந்த 3 வருடங்களாக இந்தியத் தூதர் தங்களை வந்து பார்க்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி மேலும் கூறுகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட 37 ஆண்களும் 6 பெண்களும் சிறிலங்கச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.