பாகிஸ்தான் சிறையில் உள்ள 99 இந்தியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நடந்துவரும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில் வருகிற 24 ஆம் தேதி இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய அயலுறவு அமைச்சர் பாகிஸ்தான் வருவதை முன்னிட்டு மீனவர்கள் 96 பேர் உள்பட 99 இந்தியர்களை விடுதலை செய்யுமாறு பிரதமரின் உள்துறை ஆலோசகர் ரஹ்மான் மாலிக் உத்தரவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.