நில நடுக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒலிம்பிக் சுடர் ஓட்டம் ரத்து செய்யப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் வருகிற ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் 2008 போட்டிகள் துவங்குகின்றன. இதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 20,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இதையடுத்து, நில நடுக்கத்தினால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை ரத்து செய்வதாகச் சீன அரசு அறிவித்துள்ளது.