சோமாலியா அருகில் 10 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிய கப்பல் ௦ஒன்று இந்த மாதத் துவக்கத்தில் மொகதிசு நோக்கிப் புறப்பட்டது. சோமாலியாவில் இருந்து 55 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது அந்தக் கப்பல் திடீரென்று காணாமல் போனது.
இந்நிலையில், அந்தக் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கப்பல்துறை உயரதிகாரி ஒருவர் இன்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் விவரங்களை எதிர்பார்ப்பதாகவும், கடத்தப்பட்ட கப்பல் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.