இலங்கையில் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா கடைவீதியில் இன்று காலை 11 மணிக்கு கையெறி குண்டு ஒன்று வெடித்ததாகவும், இதில் 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 17 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.
இந்தக் குண்டுவெடிப்பிற்குக் காரணம் தெரியவில்லை என்று பொதுமக்களும், தாக்குதல்காரர்கள் சிறப்பு அதிரடிப் படையினரைக் குறிவைத்து வீசிய கையெறி குண்டு குறிதவறி பொதுமக்களின் மீது விழுந்து வெடித்திருக்கலாம் என்று காவல்துறையினரும் தெரிவிக்கின்றனர்.