ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் இன்று அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனனைச் சந்தித்த அமெரிக்கத் தூதர் டெவிட் முல்ஃபோர்ட், ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அமெரிக்காவின் சார்பில் இரங்கலைத் தெரிவித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டெவிட் முல்ஃபோர்ட், "குண்டுவெடிப்புகளுக்குப் பிறகான விசாரணைகளுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். எங்களால் முடிந்த வகையில் நாங்கள் உதவ விரும்புகிறோம் என்பதை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.
இதுகுறித்துப் பேசிய சிவசங்கர் மேனன், "உதவி தேவைப்பட்டால் நிச்சயமாகக் கேட்கிறோம்" என்றார்.