தைவானில் மூன்று நிலநடுக்கங்களும், பிலிப்பைன்சில் இரண்டு நிலநடுக்கங்களும் இன்று அடுத்தடுத்து ஏற்பட்டன.
தென்கிழக்குத் தைவானில் இன்று அதிகாலை 2.27 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8 மணி வரையில் கிடைத்த தகவல்களின்படி இந்த நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் சேதம் ஒன்றுமில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இதேபோல, தென்கிழக்கு ஃபியூஜியன் மாகாணத்தில் தைவான் எல்லையில் உள்ள ஜிம்மன் கவுண்டியில் இன்று காலை 5.27 மணிக்கு 3.5 ரிக்டர் அளவிலும், 8.4 மணிக்கு 3.6 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதனால் ஏற்பட்ட சேத விவரங்களும் உடனடியாகத் தெரியவில்லை.
பிலிப்பைன்சில் 2 மித நிலநடுக்கங்கள்!
பிலிப்பைன்சில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு மித நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு மண்ணியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இஸ்பெலா மாகாணத்தில் உள்ள தினபிகி நகரத்தில் அதிகாலை 5.08 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதேபோல, தினபிகிக்கு அருகில் உள்ள காயான் நகரத்தில் 12.38 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் பெரியளவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.