நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
சீனாவில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு சுமார் 12,000 பேர் பலியாகியுள்ளனர். பல்வேறு நகரங்களில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மீட்புப் பணிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அவற்றைச்செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சர்வதேச உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.