ஐக்கிய அரபுநாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடந்துவரும் வர்த்தகம் தொடர்பான உயர்மட்டப் பேச்சுக்களின் ஒருபகுதியாக, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூன்று நாள் பயணமாக இன்று துபாய் சென்றடைந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வந்தடைந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவரை ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்தியத் தூதர் தல்மீஸ் அகமது, துபாய் தூதரக அதிகாரி வேணு ராஜ்மோனி ஆகியோர் வரவேற்றனர்.
அமைச்சர் இன்று ஐக்கிய அரபு நாடுகள் அதிபர் ஷேக் கலிஃபா பின் சையத், அயலுறவு அமைச்சர் ஜேக் அப்துல்லா பின் சையத் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது, இரு அரசுகளுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகம் தொடர்பான உயர்மட்டப் பேச்சுக்கள் பற்றி விவாதிக்கப்படும் என்றும், ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகும் வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.