சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் தெரிவித்தார்.
சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் கய்டா தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மகாணத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் பதுங்கியிருக்கிறான் என்று அமெரிக்க ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
அதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார், "பின் லேடன் பாகிஸ்தானில் இல்லை. அதேநேரத்தில், ஆஃப்கன் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் பகுதியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்" என்றார்.
இருந்தாலும், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் அல்- கய்டா பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.