Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மண்டேலா!

அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மண்டேலா!
, சனி, 3 மே 2008 (15:40 IST)
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், நிறவெறி எதிர்ப்புப் போராளியுமான முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா அமெரிக்காவின் பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் உள்ளார்.

அவர் இன்னமும் சிறப்பு அனுமதியின்றி அமெரிக்காவிற்கு வருகை தர இயலாது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் "இது மிகவும் தர்ம சங்கடமானது" என்று கூறியுள்ளார்.

1970, 80 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவின் ஆளும் சிறுபான்மை வெள்ளை இனத்தவர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியது, அதனை அப்படியே அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் சிந்தனையின்றி கடைபிடித்து வந்தன.

இதனால் நெல்சன் மண்டேலா உட்பட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் பிற உறுப்பினர்களும் அமெரிக்காவில் நுழைய சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால் அது இன்னமும் நீடித்து வருவது தர்மசங்கடமான ஒன்று என்று ரைஸ் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் பன்னாட்டு உறவுகள் குழுவின் தலைவரான ஹோவர்ட் பிரவுன் பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலிலிருந்து பழைய மற்றும் புதிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் பெயர்களை நீக்க மசோதா ஒன்றை தாக்கல் செய்கிறார்.

ஜூலை 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 90ஆவது பிறந்த நாள். அன்றைய தினத்திற்குள் இது சரி செய்யப்படுவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil