இராக் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட இரண்டு மனிதக் குண்டுத் தாக்குதல்களில் 35 பேர் பலியானதுடன் 66 பேர் காயமடைந்தனர்.
தியால என்ற மாகாணத்தில் நேற்று இந்த பயங்கர தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி வந்த இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று மேஜர் ஜெனரல் அப்தெல் கரீம் தெரிவித்தார்.
இதனிடையே, வியாழக்கிழமை காலை மத்திய பாக்தாத் பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ரோந்து வாகனத்தின் மீது தீவிரவாதிகள் குண்டுகள் பொருத்திய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த நிகழ்வில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகினர். 21 பேர் காயமடைந்தன