வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மத அமைப்பு ஒன்றின் அலுவலகத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
பெஷாவர் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கைபர் பழங்குடியினர் பகுதியில் உள்ள நற்பண்புகள் பாதுகாப்பு அமைப்பு என்ற மத அமைப்பின் அலுவலகத்தில் இன்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், தற்கொலைத் தாக்குதல் பற்றி தீவிர விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தனர்.