Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரப்ஜித் குடும்பம் பா‌கி‌ஸ்தா‌ன் சென்றது!

சரப்ஜித் குடும்பம் பா‌கி‌ஸ்தா‌ன் சென்றது!
, புதன், 23 ஏப்ரல் 2008 (16:30 IST)
பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜித் சிங்கை சிறையில் சென்று சந்திக்கவும், அவரை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் அரசிடம் முறையிடவும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்துள்ளனர்.

சரப்ஜித் சிங் மனைவி, மகள்கள் ஸ்வந்தீப், பூனம், சரப்ஜித் சகதோரி தல்பீர் கவுர், இவரது கணவர் பல்தேவ் சிங் ஆகியோருக்கு 7 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது.

இன்று வகா எல்லையை கடந்த இவர்கள் சரப்ஜீத் சிங் நிரபராதி என்று தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடையே சரப்ஜித் மனைவி சுக்ப்ரீத் கூறுகையில், " எனது கணவர் மஞ்சித் சிங் அல்ல, சரப்ஜித் சிங்தான். ஒரு சாதாரண விவசாயியான என் கணவர் குடிபோதையில் இருந்தபோது எல்லையை கடந்து வந்து விட்டார்" என்றார்.

18 ஆண்டுகாலம் கழித்து தற்போது கணவரைக் காண வந்துள்ளதாகவும், தனக்கு அனைவரின் ஆதரவு கிட்டும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 பேரை பலி வாங்கிய 4 குண்டுவெடிப்புகள் தொடர்பாக சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil