பாகிஸ்தானின் புதிய பிரமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுப் ரஷா கிலானி தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது மொத்தம் 342 இடங்களைக் கொண்ட பாகிஸ்தான் தேசியச் சட்டப் பேரவையில் இன்று நடந்த பிரதமர் தேர்தலில் கிலானிக்கு 264 வாக்குகள் கிடைத்தது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் கிலானிக்கு முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்), கட்சி, அவாமி தேசிய கட்சி, உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக கிலானி நாளை பதவியேற்கிறார். அவருக்கு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.