சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க அயல்நாடுகளைச் சேர்ந்த வாசிகளுக்கு பிரிட்டன் அரசு அடையாள அட்டையை விரைவில் கட்டாயமாக்க உள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வரும்போது, பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள் தங்களது இரண்டு கைரேகையை பதிந்து, சுய விபரங்களுடன் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தங்களது விபரங்களை அளிக்காத அயல்நாடுகளைச் சேர்ந்த பிரிட்டன் வாசிகளுக்கு தொடர்ந்து பிரிட்டனில் தங்கும் அனுமதி மறுக்கப்படும். முதற்கட்டமாக, ஒவ்வொரு குற்றத்திற்கும் 250 பவுண்ட்ஸ் வீதம், அதிகபட்சமாக ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
செய்தித்தொடர்பாளர் கிரிஸ் ஹுனே கூறுகையில், "பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பில் மிகச்சிறந்த மாற்றம் மேற்கொள்ள்கிறது. சட்டவிரோதாமாக மற்ற நாடுகளுக்கு இடம்பெயர்வதை இந்த மாற்றம் கட்டுப்படுத்தும். மற்ற நாடுகளுடனான மூன்று வளைய பாதுக்காப்புக்கும் அடையாள அட்டை அவசியமாகிறது. பிரிட்டனை பார்த்து மற்ற நாடுகளும் கைரேகையுடனான விசா திட்டத்தை பின்பற்றும்" என்றார்.