நேபாள மன்னர் ஞானேந்திரா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டாத கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.55,486,000.
ஆம். 55 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சாரக் கட்டண பாக்கியை வைத்துள்ளனர் இந்த மன்னர் குடும்பத்தினர்.
மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கேட்பதற்கு ஆளில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தும் மன்னர் குடும்பத்தினர், அதற்குரிய கட்டணத்தை மட்டும் கட்ட மறந்துவிட்டனர் போலும்.
இவ்வளவு காலம் வெளிச்சத்திற்கு வராத இந்த விஷயத்தை கான்டிபுரில் இருக்கும் மின்சாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்டாத மின்சார கட்டணத்திற்கான வட்டி மற்றும் அபராதத் தொகையைக் கணக்கிட்டால், கட்ட வேண்டியத் தொகையை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னர் மற்றும் அவரது மகன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 22 நெருங்கிய உறவினர்கள் தங்களது மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதில்லையாம்.
நேபாளம் முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் இவர்கள் மட்டும் ஏகபோகத்திற்கு மின்சாரத்தை வீணடிக்கின்றனராம்.