சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் கடலோரப் பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று சிறிலங்கக் கடற்படைத் தளபதி வசந்த கரணகோட தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் நடந்த இந்தியப் பெருங்கடலோர நாடுகளின் கடற்படைத் தளபதிகளின் கூட்டத்தின் இடையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துடன், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறினார்.
இதனிடையே, சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என்றும், மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் இது உறுதியாகி உள்ளதாகவும் இந்திய கடலோரக் காவல்படை இயக்குநர் ஆர்.எப்.கான்ட்ரக்டர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.